ஏரல்: மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு தூத்துக்குடியில் இன்று (17ம் தேதி) தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கலைக்குழு சார்பில் மாநாடு விளக்க பிரசாரம் மாவட்ட முழுவதும் நடந்து வந்தது. இதையடுத்து கலைக்குழு பிரசாரம் வைகுண்டம் ஒன்றிய பகுதிகளான ஏரல், சாயர்புரம், முக்காணி மற்றும் வைகுண்டம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் தலைமையில் புதுகை பூபாலம், முத்துசிறப்பி மற்றும் பாரதி கலைக்குழு சார்பில் நடத்தப்பட்டது. ஏரல் நகர செயலாளர் பெஸ்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் தர்மலிங்கம், சிலுவைமுத்து, காமராஜ்நகர் கிளை செயலாளர் லிங்கமுத்து மற்றும் சுந்தரம், பிரமையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஓட்டப்பிடாரம்:ஓட்டப்பிடாரம், பசுவந்தனை எப்போதும்வென்றான், குறுக்குசாலை மற்றும் புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் வீதி நாடகம் மூலம் பிரசாரம் செய்தனர். இதில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராகவன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கழுகுமலை:கழுகுமலைக்கு வேன் மூலம் வருகைதந்த கலைக்குழுவினருக்கு கழுகுமலை நகர மார்க்சிஸ்ட் செயலாளர் மாரியப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கழுகுமலை காந்தி மைதானத்தில் மாநில மாநாடு குறித்து கரகாட்டம், நாட்டுப்புறப்பாட்டு, தப்பாட்டம் மூலம் பிரசாரம் மேற்கொண்டனர். மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு, கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ், குருசாமி, முருகன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக