வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்





தூத்துக்குடி, பிப். 9:வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியை வளர்த்து கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்த உதவும் வகையில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. 

இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெற முடியாது. இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்2 மற்றும் பட்டயப்படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். 31.12.2012க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். 

ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற எழுத படிக்க தெரிந்து இருந்தால் மட்டும் போதுமானது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிவுற்றிருக்க வேண்டும். பயனாளிகள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. வகுப்பை சார்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 

இத்தகுதியுடைய வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் பிப்.23ம் தேதிக்குள் நேரில் வந்து கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...