ஞாயிறு, 15 ஜூலை, 2018

முற்றிலும் சிதைந்து முகவரி இழந்துவிட்டது எடக்கு முடக்கான ஏரல்-முக்காணி சாலையால் கடும் பாதிப்பு: சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?




 ஏரலில் இருந்து முக்காணி செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் மூன்றாவது பெரிய வணிக நகரமாக உள்ளது. ஆனால் இங்குள்ள முக்கிய சாலையான ஏரலில் இருந்து முக்காணி செல்லும் சாலை மிக மோசமான நிலையில் போக்குவரத்திற்கு லாய்க்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாகதான் புதுமனை, வாழவல்லான், உமரிக்காடு மற்றும் முக்காணியில் இருந்து ஏராளமான மாணவிகள் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வந்து படித்து வருகின்றனர். இதேபோல் ஏரல், புதுமனை உட்பட பகுதிகளில் இருந்து வாழவல்லான், உமரிக்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த குண்டும், குழியுமான சாலை வழியாகத்தான் தினசரி சென்று வருகின்றனர்.
மேலும் ஏரலில் இருந்து முக்காணி செல்லும் சாலையில் இருபக்கத்திலும் 20க்கும் மேற்பட்ட செங்கள் சூளைகள் இருப்பதால் இதில் பணி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இப்பகுதியில் வாழை விவசாயம் செய்துள்ள விவசாயிகளும் இந்த ரோட்டை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். ஏரலில் இருந்து முக்காணி வழியாக தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் உட்பட பகுதிகளுக்கு ஆயிரக்காண வாகனங்கள் இந்த சாலை வழியாக தினசரி சென்று வருவதால் இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவு காணப்படும் சாலையாக உள்ளது. ஆனால் இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாததினால் குண்டும், குழியுமாக ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் தட்டிதடுமாறி சென்று வருகிறது. இந்த சாலையில் ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து புதுமனை வரை சாலை இருந்த இடம் தெரியாமல் சாலையின் நடுவில் மரணக்குழி ஏற்பட்டுள்ளது.

 இதனால் இவ்வழித்தடத்தில் வாகனங்கள் ஊர்ந்து தட்டிதடுமாறி சென்று வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஏரல்-முக்காணி சாலையை பார்வையிட்டு புதிய தார்சாலை உடன் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரல்&முக்காணி ரோட்டில் மிக மோசமான நிலையில் உள்ள ஒரு சில இடத்தில் மட்டும் மேடு பள்ளம் தெரியாமல் இருப்பதற்காக சரள்மணல் அள்ளி போட்டுள்ளனர். இதுவும் வாகனம் செல்லும் போது புழுதிபடலமாக ஏற்பட்டு வருகிறது. இதேபோல் ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் மெயின்ரோடு குண்டும், குழியுமாக இருந்ததை கடந்த மாதம் புதிய தார்ரோடு போடப்பட்டது. ஆனால் குரும்பூரில் இருந்து ஏரல் வரை தார்ரோடு போடப்படாமல் சேதுசுப்பிரமணியபுரம் வரைதான் தார்ரோடு போடப்பட்டது.

இதனால் சேதுசுப்பிரமணியபுரத்தில் இருந்து சேதுக்குவாய்த்தான் வழியாக ஏரல் ஆற்றுப்பாலம் வரை தார்ரோடு போடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இந்த ரோட்டில் குறைபோட்டுள்ள மீதமுள்ள ரோட்டையும் புதியதாக போட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னர். மேலும் மிக மோசமான நிலையில் உள்ள திருப்பணிசெட்டிக்குளம்&சாயர்புரம் ரோடு, ஏரலில் இருந்து வாழவல்லான், ஆறுமுகமங்கலம், மாரமங்கலம், தீப்பாச்சி, இடையர்காடு செல்லும் ரோடு உட்பட ரோடுகளை சீரமைத்திட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...