ஞாயிறு, 15 ஜூலை, 2018

ஏரல் தனி தாலுகா அமைக்க இளஞ்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

ஏரல், 15.07.18
ஏரல் தனி தாலுகா அறிவிப்பை நடைமுறைப்படுத்தக்கோரி  ‘இளஞ்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் 2017, நவம்பர் 22ல் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய  வணிக நகரமான ஏரல் பகுதி தனி தாலுகா ஆக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் 7 மாதங்கள் கடந்த நிலையிலும் வருவாய்த்துறை சார்பில் அதற்கான கோப்புகள் தயாரிக்கும் பணி நடைபெறவில்லை. அரசு சார்பிலும் அடுத்தகட்ட எந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பல ஆண்டுகளாக இந்தக்கோரிக்கைக்காக போராடி வரும் ஏரல் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும், வணிகர்களும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மக்களின் மனநிலையை அரசுக்கு உணர்த்தும் வகையில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் ஏரல் நகர காந்திஜி சிலை அருகில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சு.விடுதலைச்செழியன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை அமைப்பாளர் சு.விடுதலைச்செழியன் தலைமை வகித்தார்.
இதில், ஏரல் தனி தாலுகா அறிவிப்பை விரைந்து நடைமுறைப்படுத்தவும், நீட் தேர்வை தேசிய அளவில் ரத்து செய்யவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை  9-வது அட்டவணையில் இணைத்து பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகளை  வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தென்மண்டல அமைப்புச்செயலாளர் பால்.ராசேந்திரம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றுகிறார். கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களும் உரையாற்றினர்.
இந்த. ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை அமைப்பாளர் முத்துராஜ், ஒன்றிய துணை அமைப்பாளர் அஜித்வளவன், மண்டல செயலாளர் தமிழினியன், கருத்தியல் பரப்புரை தமிழ்குட்டி, திராவிட கழகம் பால் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...