ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் மோகன், பொருளாளர் வில்சன் வெள்ளையா, முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ராபட்சன் சுதந்திரராஜ், திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பொறுப்பு ஞானசெல்விஜோதி வரவேற்றார். பள்ளியில் முதலிடம் பெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஜபினத்து மாஜனா, 10ம் வகுப்பு மாணவிகள் பாத்திமா பஹ்மியா, பிரியங்கா ஆகியோருக்கு சேர்மன் கோயில் அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் தலா 1 பவுன் தங்கம் வழங்கி பேசினார். 12 மற்றும் 10ம் வகுப்பில் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு புஷ்பம் ரமேஷ் தலா 2 கிராம் தங்கமும், 3ம் இடம் பெற்ற மாணவிக்கு சவுந்திரபாண்டியன், நானராஜன் ஆகியோர் 1 கிராம் தங்கமும் பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் ராயப்பன், சீனிவாசன் அறக்கட்டளை ஆலோசகர் முருகன், ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைவர் தசரதபாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் பாக்கர் அலி, வியாபாரிகள் சங்கம் துணைத் தவைலர் தாணுலிங்கம், எல்.ஏ குரூப்ஸ் சண்முகமுருகன், அரிமா அருணாச்சலம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முருகேசன் உட்பட பலர் பேசினர். முதுகலை ஆசிரியர் அன்டோ அருள் ரத்தினம் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக