வியாழன், 6 மார்ச், 2014

தூத்துக்குடி லோக்சபா தொகுதி ஜெயதுரை எம்.பி., கூறியதாவது:

தூத்துக்குடி லோக்சபா தொகுதிக்கு எம்.பி., வளர்ச்சி நிதி 19.05 கோடி ரூபாய்மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அனைத்து தொகைக்கும் எம்.பி., பணிகள் ஒதுக்கீடு செய்துள்ளார். இதுவரையில் 17.53 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.58 கோடி ரூபாய்க்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இதுவரையில் 92.14 சதவீதம் அளவிற்கு நிதியை பயன்படுத்தியுள்ளார். 
கல்விக்கு முக்கியத்துவம்: எம்.பி., நிதியில் கல்விக்காக பள்ளி கட்டடங்கள், சுற்றுச்சுவர், குடி நீர் இல்லாத பகுதிகளில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பணியகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான குளங்கள், வரத்துக்கால்வாய்கள் தூர் வாற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2012 ம் ஆண்டு ஒதுக்கீடு செய்ய பணிகள் கூட நிறைவு பெறாத நிலையில் பல பணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
ஜெயதுரை எம்.பி., கூறியதாவது: 
*கடந்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் தொகுதி மக்களை எத்தனை முறை சந்தித்து உள்ளீர்கள்? 
மாதத்தில் மூன்று நாட்கள் தொகுதி மக்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளேன். இதில் காலை 6 மணிக்கு துவங்கினால் இரவு 12 மணி வரை மக்களை சந்தித்துள்ளேன். எத்தனை முறை என்பது கணக்கிட முடியாது. 
*உங்கள் தொகுதி குறித்து பார்லிமென்டில் என்னென்ன பேசியுள்ளீர்கள்? 
*மத்திய அரசு நிதி மூலமாக ஏதேனும் திட்டங்களை உங்கள் தொகுதிக்கு கொண்டுவந்து உள்ளீர்களா? 
செமி மெக்கானிசத்தில் தீப்பெட்டி உற்பத்தி செய்பவர்கள் கலால் வரியால் துன்பப்பட்டனர். அது குறித்து பேசி 10 சதவீத வரியை ஆறு சதவீதமாக குறைத்துள்ளேன். விமான நிலைய விரிவாக்கம் குறித்து பேசி நில ஆர்ஜித பணிகள் 586 ஏக்கரில் 380 ஏக்கர் வரை ஆர்ஜிதம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இ.எஸ்.ஐ., மருத்துவமனை குறித்து பேசியதால் தற்போது பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தமிழக அரசு இடம் தாராததால் 
துறைமுக நிர்வாகம் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பள்ளி அமையவுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தினை சிங்கப்பூர், சீனாவில் உள்ள ஷாங்காய் துறைமுகம் போல மாற்றம் செய்ய பேசியுள்ளேன். 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு படிப்படியாக பணிகள் நடந்து வருகிறது. கடல் சார் பயிற்சி மையம் குறித்து பேசி பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலை கழிவுகளால் தூத்துக்குடி நகர் மாசுபட்டு, மக்களுக்கு நோய்கள் பரவி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும், தொழிற்சாலைகள் தங்கள் தண்ணீர் தேவைக்கு ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கு மேல் எடுப்பதால் 48 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீருக்கு கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தில் மூலம் எடுக்க வலியுறுத்தியுள்ளேன். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்குதல், திருநெல்வேலி -திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில், திருச்செந்தூர்- பழனி தினசரி ரயில் சேவை, சென்னை, கோவைக்கு லிங் எக்ஸ்பிரஸ் வசதி ஆகியவற்றை பேசி பெற்று தந்துள்ளேன். மதுரையில் இருந்து மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு நேரடி இரட்டை ரயில் பாதை, கிழக்கு கடற்கரை பகுதிகளை இணைக்கும் விதமாக ரயில் பாதை வசதி, மதுரையில் இருந்து நேரடியாக தூத்துக்குடிக்கு ரயில் பாதை வசதி கேட்கப்பட்டு ஆய்வு பணியில் உள்ளது. 
*எத்தனை மசோதாக்களுக்கு ஆதரவாக, நீங்கள், ஓட்டு அளித்து உள்ளீர்கள்? 
எனக்கு தெரிந்து நிறைய மசோதாக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளேன். கட்சியின் கட்டுப்பாட்டின் படி எனது நிலைப்பாடு இருந்தது. எத்தனை என்பது கணக்கிட்டு சொல்ல முடியவில்லை. 
* கடந்த ஐந்து ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களில், எது மிக முக்கிளானது என கருதுகிறீர்கள்? 
கட்டாய கல்வி சட்டம், கல்வியால் தான் தமிழகம் முன்னேறியுள்ளது. வட மாநிலங்களில் கல்வி அறிவு குறைவு காரணமாக வளர்ச்சியில்லை. உணவு பாதுகாப்பு சட்டம். தமிழகத்தில் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. வடமாநிலங்களில் இது போன்ற வழங்கப்படாததால் இந்த சட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. 
* உங்கள் செயல்பாடுகளால், தொகுதி மக்களிடையே, உங்கள் கட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டு உள்ளதா? 
ஒரு எம்.பி.,யால் இவ்வளவு தான் செய்ய முடியும், திருப்திகரமாக செயல்பட்டுள்ளதால், நிச்சயம் தி.மு.க., விற்கு நற்பெயர் பெற்று தந்துள்ளேன்.உங்கள் *தொகுதியில், உங்கள் கட்சி, இந்த முறை வெற்றிபெறுமா? 
மீண்டும் நானே நிறுத்தப்பட்டால் வெற்றி உறுதியாகும். கட்சி வேட்பாளர் அறிவிப்பை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...