ஏரல்
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
ஆலோசனை கூட்டம்
ஏரல் ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே முதல்– அமைச்சர் ஜெயலலிதா 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்தார். தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு, தீவிர பிரசார சுற்று பயணத்தையும் தொடங்கி விட்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். நாம் மக்களிடம் அதை எடுத்து சொல்லி வாக்குகள் கேட்கலாம். நமது வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி கடந்த 30 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகிறார்.
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை இந்தியாவின் பிரதமராக்க அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் செ.முருகன் (ஸ்ரீவைகுண்டம்), ராஜ்மோகன் (சாத்தான்குளம்), ஷேக் தாவூது (ஆழ்வார்திருநகரி), சிவ சுப்பிரமணியன் (கருங்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
எல்.சசிகலா புஷ்பா எம்.பி., தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, யூனியன் தலைவர்கள் முத்துசெல்வி அழகேசன் (ஸ்ரீவைகுண்டம்), பிச்சையா (கருங்குளம்), விஜயகுமார் (ஆழ்வார்திருநகரி), சுரேஷ்குமார் (சாத்தான்குளம்), பஞ்சாயத்து தலைவர் தசரத பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக