வியாழன், 10 டிசம்பர், 2015

ஏரல் அருகே சூழைவாய்க்கால் பயங்கரம் 5–ம் வகுப்பு மாணவி தலையில் கல்லைப் போட்டு கொலை பாலியல் பலாத்காரம் செய்து கொலையா? போலீஸ் விசாரணை

ST
ஏரல்,
ஏரல் அருகே 5–ம் வகுப்பு மாணவி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். அவரை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
5–ம் வகுப்பு மாணவிதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சூழைவாய்க்கால் மகா கணபதியாபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 35). இவர் குறிசொல்லும் தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி பேராச்சி (30). இவர்களுக்கு முத்தரசன் (18), சூரியா (16), அழகேசன் (9), முத்துசெல்வம் (6) ஆகிய 4 மகன்களும், ஜமுனா (14), முத்துசெல்வி (3) ஆகிய 2 மகள்களும் இருந்தனர்.
ஜமுனா, சூழைவாய்க்காலில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5–ம் வகுப்பு படித்து வந்தாள். அவளுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. பின்னர் அவர் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை.
தனியாக இருந்தாள்இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏசுதாஸ், அவருடைய மனைவி பேராச்சி ஆகியோர் வழக்கம்போல் வெளியூர்களில் குறிசொல்வதற்காக புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் தங்களுடைய மகன்கள் முத்தரசன், சூரியா, மகள் முத்துசெல்வி ஆகியோரையும் தங்களுடன் அழைத்து சென்றனர். இதனால் ஜமுனா, அழகேசன், முத்துசெல்வம் ஆகிய 3 பேரும் வீட்டில் தனியாக இருந்தனர்.
இவர்களது பக்கத்து வீட்டில் பாட்டி காளி, அத்தை மாரியம்மாள் (40) ஆகியோர் வசித்து வருகின்றனர். எனவே இவர்கள் ஜமுனா, அழகேசன், முத்துசெல்வம் ஆகிய 3 குழந்தைகளையும் கவனித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவில் ஜமுனா, அழகேசன், முத்துசெல்வம் ஆகியோருடன் அத்தை மாரியம்மாள் தூங்கி கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் பாட்டி காளி தூங்கி கொண்டிருந்தார்.
கல்லை போட்டு கொலைஅப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் சிறுமி ஜமுனாவின் தலையில் சிமெண்டு கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தனர். அப்போது அவரின் அருகில் படுத்து தூங்கிய மாரியம்மாளின் தலையிலும் கல் விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
நேற்று காலையில் பாட்டி காளி தன்னுடைய பேரன்கள், பேத்தியை பார்க்க சென்றார். அப்போது ஜமுனா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். மாரியம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரியம்மாளை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசார் விசாரணைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் ரத்தினசேகர் தடயங்களை பதிவு செய்தார். நெல்லையில் இருந்து மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, பக்கத்தில் உள்ள வாழைத்தோட்டம் வழியாக சிறுத்தொண்டநல்லூர் மெயின் ரோட்டில் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
ஜமுனாவை மர்மநபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் படுகாயம் அடைந்த மாரியம்மாளுக்கு நினைவு திரும்பிய பின்னரே ஜமுனாவின் கொலை குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...