புதன், 23 டிசம்பர், 2015

ஏரல், தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

T
ஏரல்,
ஏரல், விளாத்திகுளத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஏரல்ஏரல் ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான என்.பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பி.ஜி.ரவி (ஸ்ரீவைகுண்டம் கிழக்கு), வைகுண்டம் (மேற்கு), பார்த்தீபன் (ஆழ்வார்திருநகரி மேற்கு), ஜோசப் (சாத்தான்குளம்), நல்லமுத்து (கருங்குளம் தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுக பெருமாள், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பசுபதி, துணை அமைப்பாளர்கள் ராயப்பன், பாலமுருகன், மருத்துவ அணி அமைப்பாளர் சிவகுமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அனஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் நா.பார்த்தீபன் நன்றி கூறினார்.
விளாத்திகுளம்விளாத்திகுளத்தில் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான என்.பெரியசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் கே.ராஜாராம், மாவட்ட அவை தலைவர் என்.கே.பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருபர ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் அ.மோகன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முத்து, எஸ்.அன்புராஜன், எஸ்.ராஜாகண்ணு, சி.எஸ்.ராஜா, ஏ.முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் (புதூர் மேற்கு), ரவீந்திரன் (கிழக்கு), வேலாயுதபெருமாள் (விளாத்திகுளம் மேற்கு), சின்ன மாரிமுத்து (கிழக்கு), நவநீதகண்ணன் (கோவில்பட்டி கிழக்கு), முருகேசன் (மேற்கு), காசி விசுவநாதன் (ஓட்டப்பிடாரம் கிழக்கு), நகர செயலாளர்கள் வேலுச்சாமி, தவசி, பாரதி கணேசன், வசந்தம் ஜெயகுமார், ஒன்றிய பொருளாளர் அருள்ராஜ், விவசாய தொழிலாளர் அணி இளைய பெருமாள், இளைஞர் அணி இம்மானுவேல், டேவிட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...