செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஏரல் தரைமட்ட பால வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாலிபர் கதி என்ன? தேடும்பணி தீவிரம்

ST
ஏரல்,
ஏரல் தரைமட்ட பால வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நண்பர்கள்தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள பால்குளம் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் செல்வகுமார் (வயது 26) கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தர் (26), மகன் மகாராஜன் (28). இவர்கள் அனைவரும் நண்பர்கள்.
நேற்று காலையில் இவர்கள் 3 பேரும் ஏரல் தரைமட்ட பாலத்தில் மீன் பிடிக்க சென்றனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. ஏரல் தரைமட்ட பாலத்தின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடி கடலுக்கு செல்கிறது.
ராட்சத குழாய்க்குள் இழுத்ததுதரைமட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் குரும்பூர் ரோட்டில் நின்றவாறு செல்வகுமார், சுந்தர், மகாராஜன் ஆகிய 3 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் தரைமட்ட பாலத்தின் மீது துள்ளி செல்கின்ற மீன்களை தாவி தாவி பிடிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வகுமார் தரைமட்ட பாலத்தின் மேற்கு பகுதியில் தவறி விழுந்தார். இதனால் தரைமட்ட பாலத்தின் அடியில் உள்ள ராட்சத குழாயின் வழியாக செல்வகுமாரை வெள்ளம் இழுக்க முயன்றது.
உடனே அருகில் நின்று கொண்டிருந்த சுந்தர், மகாராஜன் ஆகிய 2 பேரும் செல்வகுமாரின் கையை பிடித்து வெளியே இழுக்க முயன்றனர். ஆனாலும் வெள்ளம் அதிகமாக சென்றதால், ராட்சத குழாயின் வழியாக செல்வகுமாரை வெள்ளம் இழுத்து சென்றது. இதனால் நண்பர்கள் 2 பேரும் கதறி துடித்தனர்.
தேடும் பணி தீவிரம்இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ஏரல் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, பூமிராஜன், நவநீதகிருஷ்ணன், குரும்பூர் சப்– இன்ஸ்பெக்டர் பால் ஐசக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தரைமட்ட பாலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள முட்செடிகளில் செல்வகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட செல்வகுமாருக்கு வள்ளி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...