ST
ஆத்தூர்,
தூத்துக்குடி– முக்காணி இடையே ரூ.76 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகளை சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
சாலை விரிவாக்க பணி
தூத்துக்குடி– முக்காணி இடையே ரூ.76 கோடியே 70 லட்சம் செலவில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் இருந்து முள்ளக்காடு வரையிலும் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
பின்னர் முள்ளக்காட்டில் இருந்து முக்காணி வரையிலும் 10½ மீட்டர் அகல சாலை அமைக்கப்படுகிறது. இதில் உப்பாற்று ஓடை பாலம் மற்றும் 2 சிறிய பாலங்கள், 23 மிகச்சிறிய பாலங்கள் கட்டப்பட உள்ளன.
தொடக்க விழா
சாலை விரிவாக்க பணி தொடக்க விழா முக்காணி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தலைமை தாங்கினார். சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சாலை விரிவாக்க பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர்கள் மாரியப்பன், திருவேங்கட ராமலிங்கம், உதவி பொறியாளர் விஜய சுரேஷ், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் எம்.பி.முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர்கள் கணேசன், வி.செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் செ.முருகன் (ஸ்ரீவைகுண்டம்), ஷேக் தாவூது (ஆழ்வார்திருநகரி), ஆறுமுகநேரி நகர செயலாளர் அரசகுரு, பஞ்சாயத்து செயலாளர்கள் எஸ்.அழகேசன் (கோவங்காடு), எஸ்.ரமேஷ்குமார் (உமரிக்காடு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை விரிவாக்க பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும். பின்னர் திருச்செந்தூர்– பெரியதாழை இடையே சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக