T
கோவில்பட்டி
கோவில்பட்டி, ஏரலில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்துவருகிறது.
கரும்பு, மண்பானை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மேலூர் பகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் லாரிகளில் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கோவில்பட்டி மெயின் ரோடு, எட்டயபுரம் ரோடு பகுதிகளில் 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், ஒரு கரும்பு ரூ.25 முதல் ரூ.30 வரையிலும் தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை, மானாமதுரை, சிவகாசி பகுதிகளில் இருந்து மண்பானைகள் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு மண்பானை ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
பனங்கிழங்கு
கழுகுமலை, பழவூர் பகுதிகளில் இருந்து பொங்கல் வைக்க பயன்படுத்தும் அடுப்பு கல் கொண்டு வரப்பட்டு, ஒரு கல் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
10 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.30-க்கும், 15 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
ஏரல்
தேனி மாவட்டத்தில் இருந்து ஏரல் பகுதிகளுக்கு லாரிகளில் கரும்பு லோடு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏரல் காந்தி சிலை
அருகில், சினிமா தியேட்டர் அருகில் 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.450 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
கோவில்பட்டி, ஏரலில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்துவருகிறது.
கரும்பு, மண்பானை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மேலூர் பகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் லாரிகளில் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கோவில்பட்டி மெயின் ரோடு, எட்டயபுரம் ரோடு பகுதிகளில் 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், ஒரு கரும்பு ரூ.25 முதல் ரூ.30 வரையிலும் தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை, மானாமதுரை, சிவகாசி பகுதிகளில் இருந்து மண்பானைகள் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு மண்பானை ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
பனங்கிழங்கு
கழுகுமலை, பழவூர் பகுதிகளில் இருந்து பொங்கல் வைக்க பயன்படுத்தும் அடுப்பு கல் கொண்டு வரப்பட்டு, ஒரு கல் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
10 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.30-க்கும், 15 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
ஏரல்
தேனி மாவட்டத்தில் இருந்து ஏரல் பகுதிகளுக்கு லாரிகளில் கரும்பு லோடு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏரல் காந்தி சிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக