ஏரல் அருகே குரங்கணியில் குறுகிய வளைவு பாலத்தினால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே பாலத்தை விரிவுப்படுத்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகேயுள்ள குரங் கணி மெயின் ரோட்டில் உள்ள குறுகிய வளைவு பாதையினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஏரலில் இருந்து குரங்கணி, தென்திருப்பேரை வழியாக திருநெல்வேலி மற்றும் நாசரேத்துக்கு பஸ்கள் சென்று வருகின்றன.
குரங்கணி, மாவடிபண்ணை, தென்திருப்பேரை பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு இவ்வழியாக லாரிகளில் குறுமண் மற்றும் செங்கல்களை ஏற்றி சென்று வருகிறது. மேலும் இப்பகுதி மாணவ, மாணவிகள் ஏரல், சிறுத்தொண்டநல்லூர் பள்ளிகள் மற்றும் சாயர்புரம் கல்லூரிகளுக்கும் இந்த வளைவு பாலத்தின் வழியாகத்தான் சைக்கிள், பைக்கில் சென்று வருகின்றனர்.
இங்குள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலையம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்பாலம் குறுகிய வளைவு பாதையில் இருப்பதால் பெரிய வாகனங்கள் திரும்பும் போது பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரவில் பைக் கில் வருபவர்களும் தடுப்பு சுவரில் மோதி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுகிய வளைவு பாலத்தை விரிவுபடுத்துவதுடன் தடுப்பு சுவரையும் சீரமைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள், மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரங்கணியில் அடிக்கடி விபத்து ஏற்படும் குறுகிய வளைவு பாலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக