வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஏரலில் ரோடு விரிவாக்கத்திற்காக பாசன மடை வாய்க்கால் பாலம் விஸ்தரிப்பு

ஏரல் புதிய ஆற்றுப்பாலம் இணைப்பு ரோட்டிற்காக ரோட்டை அகலப்படுத்தும் பணியில் பழைய பாலம் அடிமட்ட அளவிற்கு தோண்டப்படாமல் பாலம் அமைக்கப்படுவதாக கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏரலில் ரோடு விரிவாக்கத்திற்காக
பாசன மடை வாய்க்கால் பாலம் விஸ்தரிப்பு
ஏரல், பிப். 14:
ஏரலில் ரோடு விரிவாக்கத்திற்காக ஏரல் சினிமா தியேட்டர் அருகில் உள்ள பாசன மடை பாலம் விரிவாக்கம் செய்வதற்காக புதிய கல்வெட்டு பாலம் அமைக்க தோண்டப்பட்டது. இதனால் தண்ணீர் வடியாது என கூறி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் புதிய மேல்மட்ட பாலம் அமைக்கப்பட்டு, ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஏரல் சினிமா தியேட்டர் அருகில் உள்ள பாசனமடை பாலத்தை விரிவுபடுத்துவதற்காக பழைய மடை பாலத்திற்கு மேல்புறம் தோண்டப்பட்டது.
பழைய பாலத்தின் அடிமட்டத்திற்கு தோண்டாமல் புதிய பாலம் மேல்மட்டமாக போட்டால் மழைக்காலத்தில் பாலத்திற்கு மேல்புறம் உள்ள வயல்களில் தேங்கும் தண்ணீர், வாய்க்கால் மடையின் வழியாக கீழ்பகுதி வாய்க்காலுக்கு செல்வதில் தடை ஏற்படும். இதனால் தண்ணீர் வடியாமல் வெற்றிலை, வாழை மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயம் பாதிக்கப்படும் என கூறி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதில் விவசாயிகள் சண்முகநாதன், அருணாச்சலம், கந்தன், சிவமுருகன், இசக்கி, மேகலிங்கம், தங்கம் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் விவசாயிகள் சார்பில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பழைய மடை பாலத்தின் அடிமட்ட அளவிற்கு தோண்டி, புதிய பாலத்தின் அடிமட்டம் இருக்குமாறு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு அதிகாரிகள் சம்மதித்து உடனடியாக ஜேசிபி வரவழைக்கப்பட்டு பழைய பாலம் அளவிற்கு தோண்டி வேலையை தொடங்கியதால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...