ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

மும்பை தொடர் திருட்டில் தொடர்புடைய கார் ஓட்டுநர் ஏரலில் கைது

மும்பையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கார் ஓட்டுநர் ஏரலில் கைது செய்யப்பட்டார்.
ஏரல் அருகே உள்ள அகரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் சரவணன் (36). மும்பையில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த சரவணனை, அங்கு நிகழ்ந்த பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புள்ளதாக மும்பை பார்லே பகுதியைச் சேர்ந்த தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சரவணன் சொந்த ஊரான அகரத்துக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் தூத்துக்குடி வந்த தனிப்படையினர், மாவட்ட எஸ்.பி. துரையின் ஆலோசனையின்பேரில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமராஜன் தலைமையிலான ஏரல் போலீஸாருடன் சென்று கைது செய்தனர்.
இந்நிலையில் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...