ஏரல், : ஏரல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு தாமிபரணி ஆற்றில் உறை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் எடுத்து திருவழுதிநாடார்விளை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் தூய தெரசாள் பள்ளி அருகிலும், பஸ் நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி உட்பட 6 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செயல் அலுவலர் பிரபா கூறியதாவது:
ஏரல் பேரூராட்சியில் ஒரு சில இடங்களில் குடிநீர் குறைவாக வருவதாக தெரிகிறது. குடிநீரில் யாரேனும் மின்மோட்டார் பொருத்தி குடிதண்ணீர் உறிஞ்சுவது பேரூராட்சி நிர்வாகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக