சனி, 5 செப்டம்பர், 2015

ஏரல் பகுதியில் திடீர் மழை

ஏரல் பகுதியில் திடீர் மழை

பதிவு செய்த நேரம்:2015-09-05 10:57:49
VIDEO : Learn Simple Everyday Makeup Fashion Tutorial
07:18

ஏரல், : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக அக்னி நட்சத்திரத்தையும் மிஞ்சும் அளவிற்கு வெயில் அதிகமாக கொளுத்தி வந்தது. இதனால் அனல்காற்று வீசி வந்தது. ஏரல் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வது போல் மேகமூட்டம் வந்தும் ஆனால் மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை அரைமணி நேரம் ஏரல், திருவழுதிநாடார்விளை, சிறுத்தொண்டநல்லூர், சூழைவாய்க்கால் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஜார் பகுதியில் உள்ள நுழைவுவாயில் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயில்களில் தண்ணீர் முட்டளவுக்கு மேல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பஜார் பகுதிகளுக்கு நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த எதிர்பாராத மழையினால் ஏரல், புதுமனை, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி உட்பட பகுதிகளில் நேற்று செங்கல் சூளை மற்றும் சேம்பர் பகுதிகளில் செங்கல் அறுவடை செய்து காயவைத்திருந்த சுமார் 3 லட்சம் செங்கல்கள் தண்ணீரில் நனைந்து சேதாரமடைந்துள்ளது. இந்த மழையினால் ஏரல் பகுதி தென்னை, வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...