ஏரல், : ஏரலில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக சைக்கிள் ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். செயல் அலுவலர் பிரபா, அனைத்து வியாபாரிகள் சங்கம் செயலாளர் வில்சன் வெள்ளையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏரல் பேரூராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி, பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்திசிலை அருகில் முடிவடைந்தது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரமேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் பத்ரகாளி, மாரிப்பாண்டி, சித்ராதேவி, ராஜா, அடைக்கலம், அழகுமுத்து, ஜாண்சன் அற்புதராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக