புதன், 17 பிப்ரவரி, 2016

ஏரலில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

T
ஏரல்,
ஏரலில் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகன சோதனைதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக ஏரல் திகழ்கிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஏரலில் தினமும் காலை, மாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்துவதால், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரலுக்கு மோட்டார்சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்ல தயங்குகின்றனர். இதனால் அங்குள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் பாதிப்பு அடைகிறது.
முழு கடையடைப்புஎனவே போலீசாரின் தொடர் வாகன சோதனையை கண்டித்து, ஏரலில் வியாபாரிகள் நேற்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஏரல் மெயின்பஜார், பஸ் நிலையம், காந்தி சிலை பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.
இதனால் ஏரல் நகரம் வெறிச்சோடி கிடந்தது. பேக்கரி, டீக்கடை, ஓட்டல், காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...