பேருந்தில் சென்ற சண்முகநாதன் ஓபிஎஸ் வீட்டிற்கு ஓடிவந்த கதை!
சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏக்களை சொகுசு பேருந்தில் வைத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துவிடுவது என்று சசிகலா தரப்பு முடிவுசெய்து அதை செயல்படுத்திக்கொண்டிருந்தத ு.
எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க விடாமல் அவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்த இக்கட்டான நிலையில், எம்.ஏக்களை அடைத்த சொகுசு பேருந்து 3 மணி நேரமாக மெரினா கடற்கரையிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு கிரீன்வேஸ் சாலைக்கு சென்றது சொகுசு பேருந்து. கிரீன்வேஸ் சாலையில்தான் முதல்வர் ஓபிஎஸ் இல்லமும் உள்ளது.
பேருந்தில் இருந்து இறங்கி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்குள் சென்றபோது, யாருக்கும் தெரியாமல் நைசாக ஓடிச்சென்று ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் சண்முகநாதன். அங்கே ஓபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
ஓபிஎஸ்சை சந்திக்க விடுவதற்காக சொகுசு பேருந்தில் இத்தனை ஜாக்கிரதையாக சண்முகநாதனை அழைத்துவந்தோம் என்று நொந்து போயிருக்கிறது சசிகலா கோஷ்டி.
சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏக்களை சொகுசு பேருந்தில் வைத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துவிடுவது என்று சசிகலா தரப்பு முடிவுசெய்து அதை செயல்படுத்திக்கொண்டிருந்தத
எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க விடாமல் அவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்த இக்கட்டான நிலையில், எம்.ஏக்களை அடைத்த சொகுசு பேருந்து 3 மணி நேரமாக மெரினா கடற்கரையிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு கிரீன்வேஸ் சாலைக்கு சென்றது சொகுசு பேருந்து. கிரீன்வேஸ் சாலையில்தான் முதல்வர் ஓபிஎஸ் இல்லமும் உள்ளது.
பேருந்தில் இருந்து இறங்கி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்குள் சென்றபோது, யாருக்கும் தெரியாமல் நைசாக ஓடிச்சென்று ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் சண்முகநாதன். அங்கே ஓபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
ஓபிஎஸ்சை சந்திக்க விடுவதற்காக சொகுசு பேருந்தில் இத்தனை ஜாக்கிரதையாக சண்முகநாதனை அழைத்துவந்தோம் என்று நொந்து போயிருக்கிறது சசிகலா கோஷ்டி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக