புதன், 9 ஏப்ரல், 2014

ஸ்ரீவைகுண்டத்தில் பலத்த மழை

ஸ்ரீவைகுண்டத்தில் செவ்வாய்க்கிழமை 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீவைகுண்டத்தில் திடீரென மழை பெய்தது.
இந்த மழை நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 2 மணிவரை தொடர்ந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மற்றும் முன்கார்சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...