வியாழன், 10 ஏப்ரல், 2014

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு



தூத்துக்குடி,
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 24–ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 29–ந் தேதி தொடங்கியது. கடந்த 5–ந் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைந்தது. இதில் மொத்தம் 30 பேர் 41 வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 16 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ம.ரவிகுமார் முன்னிலையில் நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.
வேட்பாளர்கள் இறுதி பட்டியல்
1. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க)
2. பெ.ஜெகன் (தி.மு.க)
3. வக்கீல் ஜோயல் (ம.தி.மு.க.)
4. ஏ.பி.சி.வி.சண்முகம் (காங்கிரஸ்)
5. அ.மோகன்ராஜ் (இந்திய கம்யூனிஸ்டு)
6. புஷ்பராயன் (ஆம் ஆத்மி)
7. அய்யாத்துரை (பகுஜன் சமாஜ்)
சுயேச்சைகள்
பன்னீர்செல்வம், எம்.ஆனந்தராஜ், ஆழ்வார்சாமி கார்த்திகேயன், சாந்தாதேவி, சாமுவேல், வின்ஸ்டன் அன்டோ, ராம்குமார் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...