திங்கள், 7 ஏப்ரல், 2014

ஏரல் அருகே கோஷ்டி மோதல்: 2 பேருக்கு அரிவாள் வெட்டு; வாகனங்கள்-வீடுகள் சூறை 3 பேர் கைது



ஏரல்,
ஏரல் அருகே கோஷ்டி மோதலில் 2 பேரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பெருங்குளத்தைச் சேர்ந்தவர் துரை. இவருடைய மகன் சங்கர் (வயது 22). வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக அளித்த புகாரின் பேரில், ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
இதன்பின்னர் சம்பவத்தன்று சங்கர் அப்பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பிரிவைச் சேர்ந்த சிலர் சங்கரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக பெருங்குளம் ஆலடியூரைச் சேர்ந்த வீரமணி மகன்கள் அய்யப்பன், சங்கரன், பெருங்குளத்தைச் சேர்ந்த மூக்காண்டி மகன் சூரி, முருகானந்தம் மகன் பாலமுருகன், பூபாலன் மகன் முருகன் உள்பட 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 பேருக்கு அரிவாள் வெட்டு
இந்தநிலையில் பெருங்குளம் நடுவூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விஸ்வன் மகன் முருகன் (வயது 40). மற்றொரு முருகன் மகன் ஞான பண்டிதன் (32). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் பண்டாரவிளையில் இருந்து பெருங்குளத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். பெருங்குளம் அருகே சென்றபோது மற்றொரு பிரிவைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்து அவர்களை வழிமறித்தனர். அப்போது ‘சங்கரை எதற்காக தாக்கினீகள்?‘ என்று கூறி 3 பேரும் சேர்ந்து அரிவாளால் முருகன், ஞான பண்டிதனை சரமாரியாக வெட்டினர். இதனால் பலத்த காயம் அடைந்த முருகன், ஞான பண்டிதன் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருங்குளத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (19), நயினார் மகன் கொம்பையா (21), வீரகண்ணன் மகன் கொம்பையா (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடு- வாகனங்கள் சூறை
இதற்கிடையே பெருங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (55), பாலமுருகன் (40) ஆகிய 2 பேரின் ஓட்டு வீடுகளை மற்றொரு தரப்பினர் அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் மகிலேசுவரன் என்பவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினர். மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஒருவரது லோடு ஆட்டோ அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜன், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன், இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார் (ஏரல்), கிங்ஸ்லி தேவானந்த் (ஆழ்வார்திருநகரி), பால்துரை பிரான்சிஸ் (ஸ்ரீவைகுண்டம்), ராஜசுந்தர் (செய்துங்கநல்லூர்) தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...