ஏரல், ஏப்.7:
ஏரல் அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் வீடு, பைக், லோடு ஆட்டோ அடித்து நொறுக்கப்பட்டதில் அதிமுக, திமுக செயலாளர் உட்பட 73 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்த துரை மகன் சங்கர் (22). வாய் பேச முடியாத இவர் கடந்த 30ம் தேதி வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இச்சம்பவத்தை தொடர்ந்து ஒரு பிரிவினர் சங்கரை தாக்கினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி பெருங்குளம் ஆலடி யூரை சேர்ந்த அய்யப்பன், சங்கரன், பெருங்குளம் சூரி, பாலமுருகன், முருகன் உட்பட 10 பேரை தேடி வந் தனர். மேலும் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சங்கரை போலீசார் கைது செய்தனர். சங்கர் தாக்கப்பட்டதையடுத்து பெருங்குளம் நடுவூரை சேர்ந்த முருகன் (40), ஞானபண்டிதன் (32) ஆகிய இருவரை மற்றொரு பிரிவை சேர்ந்த 3 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். இதுகுறித்து முருகன் புகார் செய்ததையடுத்து போலீசார் விசா ரணை நடத்தி பெருங்குளம் முத்துராமலிங்கம் மகன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (19), நயினார் மகன் கொம்பையா (21), வீரணக்கண்ணன் கொம்பையா (21) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தையடுத்து இருதரப்பினரும் மோதிக்கொண்ட தில் வீடு, லோடு ஆட்டோ, பைக் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் பெருங்குளத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே பெருங்குளம் சன்னதி தெரு ஒய்வுபெற்ற ஆசிரியர் கணேசன் (60) வீட்டை ஆயுதங்களு டன் சென்று ஒருபிரிவினர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, ஜாதியை சொல்லி மிரட்டினர். இதுகுறித்து கணேசன் கொடுத்த புகா ரின் அடிப்படையில் ஏரல் போலீசார் விசாரணை நடத்தி பெருங்குளம் தங்கப் பாண்டி, சுப்பையா, சதிஷ் ராஜா, வாத்துசுடலை, கணேஷ், கொம்பையா, நாகராஜன் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த னர். இதேபோல் பெருங்குளம் திமுக நகர செயலா ளர் பாலமுருகன் (35) என்பவரது வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து ஒருபிரிவினர் நெல் மூடைகள் மற்றும் வீட்டை சேதப்படுத்தி, கொலைமிரட்டல் விடுத்து சென்றது.
இதுகுறித்து பாலமுரு கன் ஏரல் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக பெருங்குளம் அதி முக நகர செயலாளர் செல்லத்துரை, செல்லையா, ஆறுமுகம், கொம்பையா, அருணா, குருநாதன், இசக்கி, தவசிவேல், பொன்இசக்கி, சித்திரைப்பாண்டி உட்பட 18 பேர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய் தனர்.
மேலும் பெருங்குளம் நடுவூர் செல்வம் மகன் பாலமுருகன் (32) என்பவர் பைக்கில் வந்த போது ஒருபிரிவினர் வழிமறித்து, தாக்கி நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து பாலமுருகன் ஏரல் போலீ சில் புகார் செய்ததையடுத்து பெருங்குளம் அதிமுக நகர செயலாளர் செல்லத் துரை, தங்கப்பாண்டி, செல் லையா, சுப்பையா, சதீஷ் ராஜா, மாயாண்டி உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெருங்குளத்தில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக மொத்தம் 73 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தொடர்ந்து பெருங்குளத்தில் பதற்றம் நிலவுவ தால் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமராஜன் தலைமையில் ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ. மந்திரமூர்த்தி மற் றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக