வியாழன், 17 ஏப்ரல், 2014

மத்திய அரசு திட்டங்களை பெற்று கிராமங்கள் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் திமுக வேட்பாளர் ஜெகன் உறுதி

ஏரல், : மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக பெற்று கிராமங்கள் வளர்ச்சி அடைய செய்வேன்என திமுக வேட்பாளர் ஜெகன் பிரசாரம் செய்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜெகன் ஏரலில் வீதி, வீதியாக பிரசாரம் செய்தார். அப் போது அவர் பேசியதாவது:
நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின் தட்டுபாட்டை போக்குவேன் என கூறி ஆட்சிக்கு வந்தவர் தமிழகத்தை இருளில் முழ்க செய்துவிட்டார். மின்சாரமே இல்லாத நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அதிமுக தேர்தல் அறிவிப்பு என்பது அறிவிப்போடு மட்டும் தான் உள்ளது. 
அப்போது அவர் பேசு கையில், “தற்போது தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக ஆட்சியில் மின்கட்டணம், பால் விலை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலையும், பஸ் கட்டணம், மணல், செங்கல் போன்றவற் றின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டதால் தமிழக மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த வேண்டிய அரசு அவர்களின் வாழ்க்கை தரத்தை குறைத்து வருகிறது. மேலும், நான் பிரசாரம் செய்ய சென்ற 90 சதவீத கிராமங்களில் குடிநீர் பற்றா குறை நிலவுகிறது. சாலைகள் முறையாக பராமரிக்கபடாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. எனவே மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட திமுகவிற்கு வாக்களியுங்கள். 
எனக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்தால் சேது சமுத்திர திட்டம் நிறைவேற பாடுபடுவேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருவேன்.  மத்திய அரசின் திட்டங் களை முழுமையாக பெற்று கிராமங்கள் வளர்ச்சி ய டைய செய்வேன். சீரழிந்து கிடக்கும் ஏரல் பஸ் நிலையத் தை சீரமைப்பேன். இப்பகுதி வியாபாரிகள் நலன் கருதி கூடுல் பஸ் வசதி செய்து கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார். 
தொடர்ந்து அம்மாள்தோப்பு, வாழவல்லான், லெட்சமிபுரம், கொற்கை, மணலூர், மாரமங்கலம், இடையர்காடு, மஞ்சள்நீர்காயல், கோவங்காடு, புல்லாவெளி, பழையகாயல், முக்காணி, உமரிக்காடு, கொட்டாரக்குறிச்சி, ஆறுமுகமங்கலம், அகரத்தில் பிரசாரம் செய்தார்.
மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப் பாளர் ராஜ்மோகன் செல் வின், ஸ்ரீவைகுண்டம் ஒன் றிய பொறுப்பாளர் ரவி, ஒன்றிய முன்னாள் செயலா ளர் மெய்யழகன், ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலை வர் மணிவண்ணன், பஞ்சாயத்து தலைவர் அனஸ், யூனி யன் கவுன்சிலர் ராயப்பன், இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துமாலை மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். 
இதேபோல கருங்குளம் ஒன்றியத்திற்குப்பட்ட செக்காரக்குடியில் நேற்று காலை பிரசாரத்தை தொடங்கிய ஜெகன், தெய்வச்செயல்புரம், காசிலிங்காபுரம், சிங்கத்தாகுறிச்சி, பூவாணி, கலியாவூர் உள்ளிட பகுதிகளில் பிரசா ரம் செய்தார். 
இதில் இளைஞரணி முன்னாள் துணை அமைப் பாளர் ராஜா, பிரபாகர், காசிலிங்காபுரம் செயலாளர் சுப்பிரமணி, இளைஞர ணியை சேர்ந்த அருள்சுந்தர், சிம்புநட்ராஜ், சுந்தர், மற்றும் சாத்ராக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...