புதன், 9 ஏப்ரல், 2014

ஏரல் அருகே அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடி உடைப்பு 5 பேர் கைது



ஏரல்,
ஏரல் அருகே அரசு பஸ்சை வழிமறித்து, ஒரு கும்பல் கண்ணாடிகளை உடைத்தது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
கண்ணாடிகள் அடைப்பு
மதுரையில் இருந்து தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஏரல், பெருங்குளம், மாங்கொட்டாபுரம் வழியாக ஸ்ரீவைகுண்டம் செல்லும் அரசு பஸ் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த யோவான் பரிசுத்தமணி (வயது 56) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார்.
இரவு 12.45 மணியளவில் ஏரல் அருகே உள்ள மாங்கொட்டாபுரம் பகுதியில் வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வைக்கோல் படப்புகளை சாலையில் வைத்து பஸ்சை வழிமறித்தனர். இதனால் பஸ் நடுவழியில் நின்றது. உடனே அங்கு மறைந்து இருந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், பஸ்சின் முன்பக்க கண்ணாடி, பின்பக்க கண்ணாடியை கம்பால் தாக்கி அடித்து நொறுக்கினர். பின்னர் அனைவரும் தப்பி ஓடி விட்டனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
5 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மாங்கொட்டாபுரத்தைச் சேர்ந்த வினோத் (18), காசிராஜன் (22), ராஜ் (20), விக்னேஷ் என்ற விக்கி (19), இசக்கிமுத்து (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். வினோத், விக்னேஷ் ஆகிய 2 பேரும் பிளஸ்–2 தேர்வு எழுதிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மா.துரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜ், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...