தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி. ஜெகனை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி (ஏப். 21) பிரசாரம் செய்கிறார்.
இதுகுறித்து திமுக மாவட்டச் செயலர் என். பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி. ஜெகனை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஏப். 21 ஆம் தேதி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
அன்றையதினம் பகல் 3 மணிக்கு முத்தையாபுரத்திலும், 3.30 மணிக்கு பழைய காயலிலும், 4 மணிக்கு முக்காணியிலும், 4.30 மணிக்கு வாழவல்லானிலும், 5 மணிக்கு ஏரலிலும் பேசுகிறார். தொடர்ந்து, 5.30 மணிக்கு குரும்பூரிலும், மாலை 6 மணிக்கு நாசரேத்திலும், இரவு 7.00 மணிக்கு சாத்தான்குளத்திலும் கனிமொழி பிரசாரம் செய்கிறார். பின்னர், இரவு 7.30 மணிக்கு மெஞ்ஞானபுரம் பகுதியிலும், 8 மணிக்கு பரமன்குறிச்சியிலும், 8.30 மணிக்கு உடன்குடியிலும், இரவு 9 மணிக்கு குலசேகரபட்டினத்திலும் கனிமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக