வியாழன், 10 ஏப்ரல், 2014

ஏரல் பேரூராட்சி துணைத்தலைவர் மணிவண்ணன் திருமண வரவேற்பு

ஏரல் பேரூராட்சி துணைத்தலைவர் மணிவண்ணன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி மணமக்களை வாழ்த்தினார்.
ஏரல் பேரூராட்சி துணைத்தலைவர்
மணிவண்ணன் திருமண விழா
ஏரல், ஏப்.11:
ஏரல் ராஜ கோபால் நாடார்& செந்தாமரை அம்மாள் மகனும் ஏரல் பேரூராட்சி துணைத்தலைவருமான மணிவண்ணனுக்கும், புதியம்புத்தூர் கருப்பசாமி நாடார்&தங்கம்மாள் மகள் சர்மிளாதேவிக்கும் புதியம்புத்தூரில் திருமணம் நடந்தது.
திருமணம் விழா மற்றும் ஏரலில் நடந்த வரவேற்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஜெயதுரை எம்.பி, ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் மெய்யழகன், ஸ்ரீவை ஒன்றிய பொறுப்பாளர் பிஜி ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, நகர திமுக செயலாளர்கள் பார்த்திபன், வரதராஜ் ஸ்டாலின், பெருமாள், முன்னாள் மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் காளிதாஸ், சூளைவாய்க்கால் பஞ்.தலைவர் அனஸ், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் துரைராஜ், வாழவல்லான் செயலாளர் மகராஜன், சிறுத்தொண்டநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜ்குமார், ஏரல் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் முருகராஜா, துணை அமைப்பாளர் முத்துமாலை, பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார் மற்றும் செல்வநாயகபுரம் முத்து, புதுமனை ஜெகன், நந்தகோபாலபுரம் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் மணமகனின் சகோதரர்கள் ஆத்திப்பழம், சுதாகர், தினகரன் ஆகியோர் வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...