செவ்வாய், 10 நவம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் 41 குளங்கள் நிரம்பின ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணி நிறுத்தம்

IST
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக 41 குளங்கள் நிரம்பி உள்ளன. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.
பலத்த மழைதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மழை பெய்ய வில்லை. அவ்வப்போது வெயில் அடித்தது. நேற்று முன்தினம் தூத்துக்குடியில் மட்டும் 12.20 மில்லி மீட்டர் மழை பெய்து இருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் சராசரியாக 383 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். இதில் 303 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. நவம்பர் மாதம் சராசரியாக 185 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். இதுவரை 111 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இந்த ஆண்டு கூடுதல் மழை நமது மாவட்டத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஓட்டப்பிடாரம், கயத்தாறு பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
41 குளங்கள்தாமிரபரணி நேரடி பாசனத்தில் உள்ள 53 குளங்களில் 28 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 2 குளங்கள் 75 சதவீதமும், 23 குளங்கள் 75 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. கோரம்பள்ளம் வடிநில கோட்டத்தில் உள்ள 54 குளங்களும் 75 சதவீதத்துக்கு குறைவாகவே நிரம்பி இருக்கிறது. வைப்பாறு வடிநில கோட்டத்தில் உள்ள 29 குளங்களில் 6 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 2 குளங்கள் 75 சதவீதமும், 21 குளங்கள் 75 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. 403 பஞ்சாயத்து குளங்களில் 7 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 132 குளங்கள் 75 சதவீதம் நிரம்பி இருக்கின்றன. இந்த மழை காரணமாக இதுவரை ஒருவர் இறந்து உள்ளார். 15 கால்நடைகள் இறந்து உள்ளன. 29 வீடுகள் முழுமையாகவும், 66 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்து உள்ளன.
ஸ்ரீவைகுண்டம் அணைதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலான இடங்களில் பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் 7–வது அணைக்கட்டான மருதூர் தடுப்பணையின் மேல்பகுதியில் தண்ணீர் தாண்டி விழுந்து பாய்கிறது.
இதேபோன்று தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணையின் மதகுகளையும் தாண்டி விழுந்து தண்ணீர் செல்கிறது. மருதூர் மேலக்காலில் 1,000 கன அடியும், கீழ காலில் 400 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகியவற்றில் முறையே தலா 900 கன அடியும், சடையனேரி கால்வாயில் 400 கன அடியும் தண்ணீர் செல்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அணையில் தூர்வாரும் பணி கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள தெற்கு காரசேரி குளம் நிரம்பியது. குளத்தின் கரையானது சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் உடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தின் வழியாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஆத்தூர், புன்னக்காயல் வழியாக சென்று கடலில் சங்கமிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...