வியாழன், 12 நவம்பர், 2015

ஏரல் புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது

IST
ஏரல்,
ஏரல் புதிய உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
புதிய பாலம்தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து செல்வதால், வாகன போக்குவரத்து துண்டிக்கப்படும். எனவே அதன் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
புதிய உயர்மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்க கடந்த ஆண்டு வனத்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்றது. தற்போது புதிய உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து தொடக்கம்கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரவில் ஏரல் தரைமட்ட பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதன் அருகில் உள்ள புதிய உயர்மட்ட பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்றன.
தற்போது பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் புதிய உயர்மட்ட பாலத்தின் வழியாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய உயர்மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...