T
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. ஆழ்வார்திருநகரியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் ம.ரவிகுமார் பார்வையிட்டார்.
பலத்த மழைதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலான இடங்களில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், தென்திருப்பேரை, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. பின்னர் காலையிலும் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
திருச்செந்தூர் கோவில் பஸ் நிலையத்தில் குளம்போன்று தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரில் உள்ள கிருஷ்ணன்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மேலும் சேரகுளம், வெட்டிகுளம், அரசகுளத்திலும் தண்ணீர் நிரம்பி வருகிறது.
ஆத்தூர், ஏரல் பகுதிகளில் வாழை, வெற்றிலை கொடிக்காலில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆறுமுகநேரியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. நாசரேத், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அதிகாலையில் பரவலான மழை பெய்தது. கயத்தாறு, கழுகுமலை, விளாத்திகுளம் பகுதிகளில் இரவு முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
கலெக்டர் பார்வையிட்டார்ஆழ்வார்திருநகரியில் தாழ்வான பகுதிகளான அண்ணா நகர், வ.உ.சி. நகர், கக்கன்ஜி நகர் ஆகிய 3 இடங்களிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. தேங்கிய மழைநீரை வடிய வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் நேற்று மதியம் ஆழ்வார்திருநகரியில் மழையால் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூடுதல் மோட்டார்கள் மூலம் மழைநீரை உறிஞ்சி தாமிரபரணி ஆற்றுக்குள் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், வட்ட வழங்கல் அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகர பஞ்சாயத்து தலைவர் ஆதிநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக