IST
ஏரல்,
ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
ரூ.16¼ கோடியில் புதிய பாலம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக நகரங்களில் ஏரலும் ஒன்றாகும். அங்கிருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்வது வழக்கம்.
தரைமட்ட பாலத்தின் நடுவில் அடிக்கடி ஓட்டை விழுந்து பழுதடைந்த நிலையில் உள்ளது. அதன் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
கடந்த 9–ந்தேதி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, தரைமட்ட பாலத்தை மூழ்கடிக்கும் நிலை ஏற்பட்டதால், புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. பின்னர் 3 நாட்களில் வெள்ளம் குறைந்தவுடன் புதிய பாலம் மூடப்பட்டு, மீண்டும் தரைமட்ட பாலத்தில் வாகனங்கள் சென்றன.
3–வது முறையாக...அதேபோன்று கடந்த 15–ந் தேதியும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், காலை முதல் மாலை வரை 2–வது முறையாக புதிய பாலத்தில் வாகனங்கள் சென்றன. பின்னர் வெள்ளம் குறைந்தவுடன் புதிய பாலம் மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், 3–வது முறையாக புதிய பாலத்தில் வாகனங்கள் சென்றன.
எனவே ஏரல் புதிய உயர்மட்ட பாலத்துக்கு விரைவில் திறப்பு விழா நடத்தி, திறக்க வேண்டும், பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக