முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புன்னக்காயல் மீனவர்கள் வியாழக்கிழமை கடலுக்கு செல்லவில்லை.
மேலும், புன்னக்காயலிலுள்ள ராஜகன்னிமாதா ஆலயத்தில் காலை 6.15 மணி திருப்பலியில் கலாமுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர், காலை 10 மணியளவில் புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை நடுநிலைப்பள்ளி, புனித ஜோசப் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர், கப்பல் மாலுமிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆலயம் முன்பிருந்து அருள் தந்தை அம்புரோஸ் தலைமையில் மௌன ஊர்வலம் சென்றனர்.
பின்னர், புனித வளனார் மைதானத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரொன்கால்லி சில்வா அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார். ஏற்பாடுகளை ஊர் கமிட்டி தலைவர் அந்தோணியப்பா பர்னாந்து, துணைத் தலைவர் மைக்கிள் பர்னாந்து ஆகியோர் செய்திருந்தனர்.
மீனவர்கள் பலர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ராமேசுவரம் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக