புதன், 5 ஏப்ரல், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
உதவித்தொகை
வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியினை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்த உதவும் வகையில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள் ஆவர்.
இந்த திட்டத்தில் பயன்பெற 10–ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்–2 மற்றும் பட்டயப்படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். 31.3.2012–க்கு முன்பு பதிவு செய்திருக்க வேண்டும். பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
1.2.2017 முதல் பதிவுதாரர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையானது, 10–ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200–ம், 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300–ம் 12–ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு ரூ.400–ம், பட்டதாரிகளுக்கு ரூ.600–ம் மாதாந்திர உதவித்தொகையாக உயர்த்தி வழங்கப்படுகிறது. பயன்தாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களில் 10–ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள கல்வித்தகுதிக்கு ரூ.600–ம், 12–ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு ரூ.750–ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000–ம் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பம்
இந்த உதவித்தொகையை பெற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், ஊனமுற்றோர் அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்துக் கல்வி சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...