வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அரசு இ–சேவை மையங்கள் மூலம் புதிய ரே‌ஷன் கார்டு பெற, மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

அரசு இ–சேவை மையங்கள் மூலம் புதிய ரே‌ஷன் கார்டு பெற, மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

அரசு இ–சேவை மையங்கள் மூலம் புதிய ரே‌ஷன் கார்டு பெற, மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
அரசு இ–சேவை மையங்கள் மூலம் புதிய ரே‌ஷன் கார்டு பெறவும், ஏற்கனவே உள்ள ரே‌ஷன் கார்டில் மாற்றங்கள் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்பொழுது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ–சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

இச்சேவை மையங்கள் மூலம், வருமான சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

முயற்சிகள் 

மேலும், இந்த பொது சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சேவை மையங்கள் வாயிலாக மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் தங்களது இல்லங்களின் அருகிலேயே பெற்று வருகிறார்கள். இச்சேவை மையங்கள் வாயிலாக கூடுதலான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டி அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரே‌ஷன் கார்டு பெற விண்ணப்பித்தல் 

அதன் ஒரு பகுதியாக 24–ந் தேதி முதல் அரசு இ–சேவை மையங்கள் வாயிலாக புதியதாக ரே‌ஷன் கார்டு பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் நீக்கம், செல்போன் எண் மாற்றம் செய்தல் போன்ற ரே‌ஷன் கார்டு தொடர்பான சேவைகள், வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரே‌ஷன் கார்டு சம்பந்தமான மேற்படி சேவைகள் பெற்றிட பொதுமக்கள் தங்களது இல்லங்களுக்கு அருகாமையில் உள்ள இ–சேவை மையங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...