வெள்ளி, 7 ஏப்ரல், 2017

தூத்துக்குடியில் கடற்சார் வாணிப தினத்தையொட்டி இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

தூத்துக்குடியில் கடற்சார் வாணிப தினத்தையொட்டி இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

தூத்துக்குடியில் கடற்சார் வாணிப தினத்தையொட்டி இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
தூத்துக்குடியில், கடற்சார் வாணிப தினத்தையொட்டி இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில், கடற்சார் வாணிப தினத்தையொட்டி இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது.

கடற்சார் வாணிப தினம் 

மும்பையில் இருந்து லண்டனுக்கு 1919–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5–ந் தேதி முதன் முதலாக வாணிப கப்பல் இயக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 5–ந் தேதி கடற்சார் வாணிப தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி 54–வது கடற்சார் வாணிப தினம் தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

கப்பல்களின் அணிவகுப்பு 

நிகழ்ச்சியையொட்டி புதிய துறைமுகத்தில் இழுவை கப்பல்கள், ரோந்து படகுகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இழுவை கப்பல்கள் திருவள்ளுவர், ஓசன் என்டோவர், ஓசன் பிரேவ், நல்லதண்ணி, தூத்துக்குடி, ரோந்து படகுகள் ஜோதி, ஹர்சா–3 மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ரோந்து படகுகள் அணிவகுத்து வந்தன.

இந்த இழுவை கப்பல்கள், படகுகள் வண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. பலூன்களையும் பறக்க விட்டனர். தொடர்ந்து இழுவை கப்பல்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து கப்பல்களில் ஏற்படும் தீயை அணைப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. தண்ணீரில் விழுந்தவரை மீட்பது பற்றியும் செயல்முறை விளக்கம் காண்பித்தனர். வண்ணப் பொடிகள் கலந்த தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர். இதனை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

கயிறு இழுத்தல்

விழாவையொட்டி துறைமுக அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள், துறைமுக ஊழியர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு, வ.உ.சி.துறைமுக பொறுப்பு கழக தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள், துறைமுகசபை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மரியாதை

முன்னதாக தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கடலில் உயிர் நீத்த மாலுமிகளின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவுத் தூணுக்கு வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...