வியாழன், 20 ஏப்ரல், 2017

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் குருபூஜை 27–ந்தேதி நடக்கிறது

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் குருபூஜை 27–ந்தேதி நடக்கிறது

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் குருபூஜை 27–ந்தேதி நடக்கிறது
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் குருபூஜை 27–ந் தேதி நடக்கிறது.
ஏரல், 

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் குருபூஜை 27–ந் தேதி நடக்கிறது.

குருபூஜை 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசை தினத்துக்கு மறுநாள் குருபூஜை நடைபெறும்.

இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சித்திரை மாத அமாவாசை தினத்தில் கோவிலுக்கு வருவார்கள். பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்களை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். பக்தர்கள் வழங்கிய பொருட்களை கொண்டு, மறுநாள் குருபூஜை தினத்தில் சமைத்து அன்னமலை தீபாராதனை நடத்தி, அன்னதானம் வழங்குவார்கள். அதேபோன்று இந்த ஆண்டு 109–வது குருபூஜை வருகிற 27–ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

அன்னமலை சிறப்பு பூஜை 

எனவே 26–ந்தேதி (புதன்கிழமை) அமாவாசை தினத்தில் பக்தர்கள் காணிக்கை பொருட்களை கோவிலில் வழங்குகின்றனர். அவற்றை 27–ந்தேதி அதிகாலையில் குருபூஜை தினத்தில் சமைப்பார்கள். பின்னர் காலை 10.30 மணிக்கு அன்னமலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...