வெள்ளி, 7 ஏப்ரல், 2017

ஏரல், அருகே இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

ஏரல் அருகே இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

ஏரல் அருகே இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
ஏரல் அருகே, கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த இளம்பெண் பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஏரல்,

ஏரல் அருகே, கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த இளம்பெண் பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவன்–மனைவி வாக்குவாதம் 

ஏரலை அடுத்த புதுமனையைச் சேர்ந்தவர் தங்கமணி. லோடு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 29). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கீதா (1¼) என்ற மகளும், யுவராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலையில் வீட்டில் 2 குழந்தைகளும் அழுது கொண்டு இருந்தனர். இதனால் தங்கமணி, தன்னுடைய மனைவியிடம் குழந்தைகளை அழாமல் பார்த்து கொள்ளுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தங்கமணி வேலைக்கு சென்று விட்டார்.

ஆஸ்பத்திரியில் சாவு 

கணவரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து காணப்பட்ட மணிமேகலை வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்தார். திருமணமான 5 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்ததால், தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...