வியாழன், 20 ஏப்ரல், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் ரே‌ஷன் கார்டுடன் புதிய செல்போன் எண்ணை பதிவு செய்ய வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரே‌ஷன் கார்டுடன் புதிய செல்போன் எண்ணை பதிவு செய்ய வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரே‌ஷன் கார்டுடன் புதிய செல்போன் எண்ணை பதிவு செய்ய வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த 1–ந் தேதி முதல் மின்னணு ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி, 
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த 1–ந் தேதி முதல் மின்னணு ரே‌ஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மின்னணு ரே‌ஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு ரே‌ஷன்கடைகளுக்கு வந்த பிறகு, சம்பந்தப்பட்ட ரே‌ஷன்கார்டுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. 
இந்த குறுஞ்செய்தியில் உள்ள 8 இலக்க எண்ணை ரே‌ஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே புதிய மின்னணு ரே‌ஷன்கார்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.
எனவே இதுவரை ரே‌ஷன் கார்டுகளில் செல்போன் எண்ணை பதிவு செய்யாமல் உள்ளவர்கள், செல்போன் எண்ணை தவறுதலாக பதிவு செய்தவர்கள் மற்றும் பழைய செல்போன் எண்ணை மாற்றம் செய்தவர்கள் புதிய செல்போன் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று தங்களது புதிய செல்போன் எண்ணை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...