வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணையாக நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Polio drops will be providing tomorrow in TN


சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என 43,051 மையங்கள் செயல்படும். மேலும் பயணிகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 1000 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...