திங்கள், 13 மார்ச், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,614 தி.மு.க.வினர் கைது ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,614 தி.மு.க.வினர் கைது ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம்
தூத்துக்குடி, 
தி.மு.க. வினர் போராட்டம்
பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ரே‌ஷன்கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி 4–வது வார்டுக்கு உட்பட்ட போல்பேட்டை, முத்தையாபுரம் எம்.சவேரியார்புரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமி, கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோயல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பூபதி உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கீழரதவீதியில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில மருத்துவரணி துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் மந்திரமூர்த்தி உள்ளிட்ட 53 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு
கயத்தாறு, கம்மாப்பட்டி, செட்டிக்குறிச்சி, கழுகுமலை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட் 104 பேரும், நாசரேத் ஐசக் தெரு, மூக்குப்பீறி, பிராகசபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நகர செயலாளர் ரவி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுடலைமுத்து, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மாமல்லன் 42 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி ஏ.ஐ.டி.யு.சி. காலனி, போலீஸ்நிலையம், தெற்கு சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 29 தி.மு.க.வினரும், காயல்பட்டினம் புது பஸ் நிலையம் அருகிலும், ரத்தினபுரியிலும் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 30 பேரும் கைது செய்யப்பட்டனர். உடன்குடி கூளத்தெரு, பெரியதெரு, குலசேகரபட்டினம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நகர தி.மு.க. செயலாளர் ஜான்பாஸ்கர் உள்ளிட்ட71பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவைகுண்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுண்டபாண்டியன், நகர செயலாளர் பெருமாள் உள்ளிட்ட 46 பேரும், ஏரலில் 24 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம்
எட்டயபுரம் நடுவிற்பட்டியில் ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர தி.மு.க. செயலாளர் பாரதிகணேசன் ஆகியோர் தலைமையில் 35 பேரும், ஓட்டப்பிடாரம் பகுதியில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய 161 பேரும் கைது செய்யப்பட்டனர். விளாத்திகுளம் பிள்ளையார்நத்தம், சன்னதி தெரு, நாகலாபுரம், சூரங்குடி, தருவைகுளம், குளத்தூர், தருவைகுளம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மேற்கு ஒன்றிய செயலாளர் வேலாயுத பெருமாள் உள்ளிட்ட 135பேரும், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நகர செயலாளர்கள் ராமஜெயம், நவீன்குமார், முத்துராமலிங்கம் உள்ளிட்ட 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி ஊரணி தெரு, இளையரசனேந்தல் ரோடு, வேலாயுதபுரம், புதுக்கிராமம், சுப்பிரமணியபுரம், பாரதிநகர் மேற்கு தெரு, அசோக்நகர், வள்ளுவர் நகர், வ.உ.சி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர செயலாளர் கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், இலக்கிய அணி செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மகளிர் தொண்டர் அணி செயலாளர் இந்துமதி, நகர துணை செயலாளர் காளியப்பன் மற்றும் 50 பெண்கள் உள்பட 382 பேர் கைது செய்யப்பட்டனர்.
2,614 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 190 இடங்களில் பங்கேற்ற கீதாஜீவன் எம்.எல்.ஏ, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் 309 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 614 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...