செவ்வாய், 7 மார்ச், 2017

குவைத், ஓமன் நாடுகளில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்'

குவைத் மற்றும் ஓமன் நாடுகளில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்கள், இயந்திரம் இயக்குபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குவைத் நாட்டில் உள்ள ஓர் முன்னணி தனியார் நிறுவனத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 22 முதல் 40 வயதுக்குள்பட்ட தொழிலாளர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் தொழிலாளர்களுக்கு  உணவு மற்றும் இருப்பிட வசதியும் சேர்த்து ரூ.33,000 ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட் மற்றும் குவைத் நாட்டின் சட்டத்திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.
இதேபோல, ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் 22 முதல் 26 வயதுக்குள்பட்ட இயந்திரம் இயக்குபவர்களாக பணிக்கு (ஙஹஸ்ரீட்ண்ய்ங் ஞல்ங்ழ்ஹற்ர்ழ்ள்) தேவைப்படுகிறார்கள். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ரூ.25 ஆயிரம் வரை ஊதியம், இலவச இருப்பிட வசதி வழங்கப்படும்.
எனவே, தகுதியுள்ள தொழிலாளர்கள் மற்றும் இயந்திரம் இயக்குபவர்கள், சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் நேரிலோ அல்லது o‌m​c‌r‌e‌s‌u‌m​@‌g‌m​a‌i‌l.c‌o‌m  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
மேலும் விவரங்களுக்கு 044-22505886 மற்றும் 22502267 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும், ‌w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.c‌o‌m ​   என்ற இணையதள முகவரியிலும் அறிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...