நாளை, அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் விவரம்

அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு சேவை வழங்க, ஒவ்வொரு தாலுகாவிலும் அம்மா திட்ட சிறப்பு முகாமை அரசு நடத்தி வருகிறது.
தூத்துக்குடி,
அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு சேவை வழங்க, ஒவ்வொரு தாலுகாவிலும் அம்மா திட்ட சிறப்பு முகாமை அரசு நடத்தி வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை), தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தாலுகா வாரியாக அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் முகாம் நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:–
தூத்துக்குடி தாலுகாவில் அய்யனடைப்பு கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் திருப்புளியங்குடியிலும், திருச்செந்தூர் தாலுகாவில் சேதுக்குவாய்த்தான் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் கருங்கடல் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் செட்டிகுறிச்சியிலும், விளாத்திகுளம் தாலுகாவில் சித்தவநாயக்கன்பட்டியிலும், எட்டயபுரம் தாலுகாவில் குமாரகிரி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கீழமுடிமண் கிராமத்திலும் முகாம் நடக்கிறது.
இந்த முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகபாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆகையால் முகாம்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக