ஏரல் ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள அமலைச் செடிகளை அகற்றும் பணியினை மாவட்ட சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார்.
====================================
தாமிரபரணி ஆற்றில் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தூர்வாரக்கோரி 50 ஆண்டு காலமாக இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். அதன் பயனாக கடந்த 2015ம் ஆண்டு இந்த அணைக்கட்டு தூர்வாரும் பணி துவங்கியது. இந்நிலையில் தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்ததாக புகார் வந்ததை அடுத்து தூர்வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி காரணமாக அணைகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் மட்டுமே அமலைச் செடிகள் அடித்துச் செல்லப்படும். இதனால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு முழுவதும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. கடந்த மாதம் கருங்குளம் ஒன்றிய பி.ஜே.பி. சார்பில் அணைக்கட்டு மதகு பகுதிகளில் இருந்த அமலைச் செடிகளை அகற்றினர். இருந்தும் பறந்து விரிந்து தற்போது வரை அமலைச் செடிகள் ஆக்கிரமித்து உள்ளன.
இன்று தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் அணைக்கட்டுப்பகுதியில் உள்ள அமலைச் செடிகளை அகற்றும் பணியினை துவக்கி வைத்தார்.
அதே போல் ஏரல் உயர்மட்டப் பாலம் பகுதியில் ஆற்றில் கருவேலமரங்கள் மற்றும் அமலைச் செடிகளையும் அகற்றும் பணியினை சார் ஆட்சியர் துவக்கி வைத்தார். இதுகுறித்து சார் ஆட்சியர் கூறும் போது,
தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச் செடிகள் மற்றும் கருவேலமரங்களை பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அகற்றும் பணியினை தொடங்கியுள்ளோம். தற்போது ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் பகுதியில் உள்ள அமலைச் செடிகள் மற்றும் கருவேலமரங்களை அகற்றும் பணியை துவங்கியுள்ளோம் மேலும் தாமிரபரணி ஆற்றை முழுவதுமாக சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதில் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சி தாமஸ் பயஸ் அருள் மற்றும் ஊர் பொதுமக்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக