தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் தாமிரபரணி தரைமட்ட ஆற்றுப்பாலம் உள்ளது. தற்போது புதிய மேல்மட்டப்பாலம் கட்டப்பட்டதால் தரைமட்டப்பாலம் பயன்பாடு இல்லாமல் உள்ளது.
தமிழகம் முழுவதும் வறட்சியின் காரணமாக குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏரல் பகுதி மக்களுக்கு பாலத்தின் மேல்பகுதியில் 5க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பாலத்தின் கீழ்பகுதியில் வாலவல்லான், கொற்கை, உமரிக்காடு ஆத்தூர் போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. வறட்சியின் காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் ஆற்றின் மேல்பகுதியில் இருந்து கீழ்பகுதிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது. இதனால் கீழ்பகுதியில் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழைய ஆற்றுபாலத்தின் குழாய்களுக்கு கீழே துளைப்போட்டு கீழ்பகுதிக்கு மர்ம நபர்கள் தண்ணீர் கொண்டு சென்றுள்ளனர். இதனால் மேல்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேல்பகுதியை சேர்ந்த ஏரல் பொதுமக்கள் சிலர் அந்த துளையை மணல் வைத்து அடைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கீழ்பகுதி பொதுமக்கள் இன்று ஆற்றுப்பாலத்தின் பகுதிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் பழைய பாலத்தை இடிக்க வேண்டும் என்றனர். உடனே மேல்பகுதி மக்களும் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்குமிடையை மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ், ஏரல் காவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் பழைய பாலத்திற்கு கீழே தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவும், மேலும் பாலத்தின்மேல் பகுதியில் இருந்து கீழ்ப்பகுதியினருக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக