குறுமண் கிடைக்காமல் குறுகிவரும் செங்கல் தொழில்
ஏரல்
சுற்றுவட்டாரத் தில் புதுமனை, அம்மாள் தோப்பு, வாழவல்லான், ஆலடியூர், உமரிக்காடு, முக்காணி, லெட்சுமிபுரம், இரண்டாம் பண்ணை விளை, குரங்கணி, மாவடிப் பண்ணை, தென்திருப் பேரை, பாலகுளம், ஆழ் வார் தோப்பு உள்ளிட்ட பகுதி களில் செங்கல் சூளைகள் மற்றும் சேம்பர்கள் தயாரிக் கும் தொழில்கள் நடந்து வருகிறது இப்பகுதியில் 15 சேம்பர்களும், நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் சூளைகளும் உள்ளன.
கடந்த ஆண்டுகளை விட குறுமண் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்த குறுமணலை எடுப்பதற்கு அரசு அணுமதி கிடைக் காததால் பல செங்கல் உற்பத்தியாளர்கள் இத் தொழிலை தொடர்ந்து நடத்த திணறிவருகின்றனர். இதனால் பல செங்கல் சூளைகள், சேம்பர்கள் மூடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை யை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு செங்கல் தயாரிப்பதற்கான குறு மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கிட வேண்டு மென செங்கல் உற்பத்தி யாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளன
நன்றி நெல்லை முரசு - ஏரல் நகர் மலர் - தேதி 10 -05-2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக