சனி, 6 மே, 2017

கால்நடை துறையில் உள்ள காலி இடங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரவிகுமார் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது;–

காலி பணியிடம் 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல், தூத்துக்குடி மண்டலத்தில் வருகிற 10–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் மண்டல இணை இயக்குனர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவபெருமனை வளாகம், புதுக்கிராமம், தூத்துக்குடி என்ற முகவரியில் நடக்கிறது.

விண்ணப்பம் 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் விண்ணப்பதாரர் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும், நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை www.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது நேர்முக அழைப்பாணைகளை நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...