புதன், 10 மே, 2017

ஏரல் மக்களின் இன்றைய தேவைகளும் எதிர்பார்ப்புகளும்

ஏரல் மக்களின் இன்றைய
தேவைகளும் எதிர்பார்ப்புகளும்
ஏரல் தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்து 200 வீடுகள் உள்ளன. இதில் 12 ஆயிரத்து 500 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு 6 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. மேலும் இப்பகுதியில் 840 கடைகள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய வணிகநகரமாக உள்ள ஏரல் பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதி, நிழற்குடை, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். அரசு பொது நூலகம், சார்பதிவாளர் அலுவலகம், அஞ்சலகம், குழந்தைகள் அங்கன்வாடி, மின் அலுவலகம் இவற்றிக்கு சொந்த கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் நிலையத்தில் இருந்தும், காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் இருந்தும் பஜாருக்குள் நுழை வாயிலில் மழைக்காலத்தில் செல்ல முடியாத அளவிற்கு மழை தண்ணீர் சாக்கடை தண்ணீருடன் சேர்ந்து தேங்கி கிடப்பதை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள சாக்கடை கழிவு தண்ணீர் செல்லும் கான்களை அகலப்படுத்திட வேண்டும்.
சுகாதாரமற்ற இடத்தில் இயங்கிவரும் ஏரல் தேர்வுநிலை பேரூராட்சிக்கு விரிவான வசதியுடன் கூடிய புதிய அலுவலக கட்டடம் கட்ட வேண்டும். பொதுமக்களுக்கு தாமிரபரணி ஆற்று நீர் வழங்குவதை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக வழங்கிடவும், வீடு, கடைகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
ஏரல் மார்க்கெட் தெருவில் உள்ள பொதுகழிப்பிடம் மற்றும் மாற்றுத்திறனாளி கழிப்பிடம் திறக்கப்படாமல் இருப்பதை திறந்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். தீயணைப்பு நிலையம் அமைத்திட வேண்டும்.
ஏரல்-கோவை, ஏரல்-கோவில்பட்டி பகுதிகளுக்கு புதிய வழித்தடத்தில் பஸ் விட நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஏரலில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதல் பஸ் வசதி வேண்டும்.

நன்றி நெல்லை முரசு - ஏரல் நகர் மலர் - தேதி 10 -05-2017







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...