தட்டார் மடத்தை சேர்ந்த பெரியசாமி 30 ஆண்டுகளாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். நெருக்கடி நேரத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். மேலும் திமுக தலைவர் கலைஞரால் முரட்டு பக்தன் என அழைக்கப்பட்டவர்.
என்.பெரியசாமி 1989, 1991 தேர்தல்களில் வெற்றி பெற்று தூத்துக்குடி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர் 1996ல் நகராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் திமுகவின் உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகள் கீதாஜீவன் தற்போது தூத்துக்குடி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக