புதன், 10 மே, 2017

கற்பகத்தருவாக இருந்து பக்தர்களை காக்கும் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி

கற்பகத்தருவாக இருந்து பக்தர்களை
காக்கும் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி
தூத்துக்குடி
மாவட்டம், திருச்செந்தூர் தாலூகா, அம்மன்புரம் மேலப்புதுக் குடியில் ராமசாமி நாடார் - சிவனைணந்த அம்மையார் தம்பதிகளின் தவத்திரு குமா ரனாக சுவாமி அவதரித் தார். அருணாசலம் எனும் நாமம் சூட்டப்பெற்று பல கலைகள் பயின்று வளர்ந் தார். பின் வைகுண்டம் தாலூகா ஏரல் மாநகரம் வந்து வசித்து வந்தார்கள்.
திருவருள் நிறைவு கொண்டு தனது குடும்பத் தின் பரம்பரை வழக்கப்படி தன்னிடம் வேண்டும் பிணி யாளர்களுக்கு சகல நோய் களையும் அப்போது குணப் படுத்தினார். மேலும் ஏரல் மாநகரில் பல பொதுப்பணி களும், கல்வி சாலைகள் தொடங்கியும், பொதுமக் களுக்கு பல நன்மைகள் செய்து வந்தார். பொது மக்களின் வேண்டுதலால் 1906 செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 1908 ஜூலை 27ம் தேதி வரை ஏரல் பஞ் சாயத்து போர்டு சேர்மனாக பணியாற்றினார். சேர்மனாக இருந்து இவர் ஆற்றிய சீரிய பணி `சேர்மன்’ அருணாசலம் என்று அழைக்க வழிவகுத்தது.
ஏரல் சேர்மனாக இருக்கும்பொழுது அருணா சலத்திற்கு வயது 28. திரு மணம் ஆகவில்லை. ஒரு நாள் தன் தம்பி கருத்தப் பாண்டிய நாடாரை அழைத்து தன் பக்கத்தில் அமர்த்தி மனம் கசிந்து பல ஆசிகள் கூறினார். அப் போது, ``நான் ஒரு வாரத்தில் நாளது 1083 கீலக வருடம் ஆடி மாதம் 13ம் தேதி 1908ம் வருடம் ஜுலை மாதம் 28ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசை பகல் 12 மணிக்கு இறைவன் திருவடி சேர்வேன். ஏரலுக்கு தென் மேற்கில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆல மரத்தின் அருகில் என்னை சமாது செய்ய வேண்டும். சமாது குழியில் என்னை வைத்து காத்திருங்கள். அவ்வேளை மேலே கருடன் வந்து மூன்று முறை வட்டமிடும். கருடனின் நிழல் என் மேல் விழும் பொழுது என் சமாது குழி யை மண்ணும், புஷ்பங் களுமாக சேர்த்து மூடி விடுங்கள்’’ என்றார்.
சொன்ன வாக்கின் படியே நடந்தது. அன்று முதல் வற்றாது வளம் கொழிக்கும் தன்பொருநை ஆற்றின் வடகரையில் திரு ஆலின் ஓரமாக புனித சமாது கொண்டு, என்றும் கருணை வுருமாக, கற்பகக்கனியாக, காத்திடும் கற்பகத்தருவாக தன்னை வேண்டும் அன்பர் களுக்கு மண்ணும், தண்ணீ ரும் தன் திருமருந்தாக கொடுத்து சேர்மன் அருணாசல சுவாமிகள் சகல பிணிகளும் அகற்றி அருள் புரிகிறார். தமிழகமெங்கும் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து வணங்கி செல்கின்றனர். இக்கோயி ல் திருவிழாக்களில் ஆடி மற்றும் தை மாதம் அமாவசை சிறப்பு வாய்ந்ததாகும். இதில் லட் சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிர பரணி ஆற்றில் நீராடி தரிசனம் செய்வார்கள்.
ஏரலில் மிகப் பழமை யான இந்து கோயில்கள், பள்ளிவாசல்களும், ஆர்.சி மற்றும் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலாயங்களும் உள்ளன. இக்கோயில்கள் அருகே இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையு டன் வாழ்ந்து வருகின்றனர்.


நன்றி நெல்லை முரசு - ஏரல் நகர் மலர் - தேதி 10 -05-2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...